நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

facebook கவிதைகள்..[ஓமனிதா! முகம்!!]

ஓ மனிதா
















நீ சிந்தித்ததென்ன
சிந்திக்கப்போவதென்ன!
நீ சாதித்ததென்ன
சாதிக்கப்போவதென்ன!

மயிலிறகாய்
கிடைத்திருக்கும் வாழ்க்கையை
மாயவலையில் மாட்டிவிட்டு-நீ
மதிமயங்கிவிடவா!-இல்லை
மரபுகளென்னும்
மதிப்புமிகுந்த சோலையில்
மணவீசி-உன்
மனம் சிறக்கவா!

சிந்தனையை சிற்பியாயிருந்து
செதுக்கி வடிவமை
உன் வாழ்க்கையை
சாதனைகள்
வசந்த சிற்பமாய் வந்து
உன் வாசல்தட்டும்
உன் வாழ்வும் செழிக்கும்..

முகம்















முகம்
அகத்தின் கண்ணாடி
சிலவேளை
அதுவே
மாயக்கண்ணாடி!

மனதை வாசிக்க
முகம்வழியே முயற்சிப்பது
முடியுமென்பது சிலநேரம்
முடியாதென்பது பலநேரம்

அதன்
உள்ளுணர்வை
வெளிச்சமாய் காட்டிவிட்டு
வெளியுணர்வை
உள்ளடக்கிக்காட்டும்

முகக்கண்ணாடி
அதுவே
மாயக்கண்ணாடி..

கிளிக் கிளிக் இங்கே

//டிஸ்கி// இது facebook கவிதைகள். கவிதை முகம் மென்னும்  //facebook இன் தமிழ்க் கவிஞர்களுக்கான ஒரு தேடல்// வாரம் ஒரு கவிதையை ஒரு தலைப்புகொடுத்து எழுத்தசொல்றாங்க. கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பதிவுலகில் நான் கற்றதும்! பெற்றதும்!...


இந்த பதிவுலகில் வந்த கொஞ்சகாலத்தில் அதாவது 9.மாதத்தில்அதில் 3, மாதம் வெளியுலகம் அறியாமலே. 6 மாதங்களாகத்தான் இந்தபதிவுலகத்தில் நன்கறியப்பட்ட எனக்குகிடைத்த வரவேற்பு [எனது மூன்று தளங்களுக்குமே] என்னை சில சமயம் மெய்மறக்கச்செய்திருக்கிறது.மகிழ்வடைச்செய்கிறது.


இதில் நிறைய கற்றுக்கொண்டேன் கற்றுக்கொள்கிறேன்.

இங்கு தோழமைகளாகட்டும். உறவுகளாகட்டும்.நட்பான உறவுகளாகட்டும். உறவுக்குள் வந்த நட்பாகட்டும் அனைத்தும் அனைத்தும் ஆனந்தத்தைதான் தந்தது.


இங்கு முகம் தெரியாத முகவரியறியாத மனங்களை மாசுகளற்று பார்க்கிறேன்.
தங்கள் எண்ணங்களை என் எண்ணங்களுக்குள் எடுத்தூற்றும் ஊற்றுக்களாய் நினைக்கிறேன்.

பதிவுலகில் எனக்கு கிடைத்தமுதல் விருது சாரூக்கா தந்தது அவர்களின் முதல் விருது என்னை ஊக்கப்படுத்தி மேடையில் காவியத் திலகத்தின் கைகளில் விருதுவாங்கும் அளவுக்கு கொண்டு சென்றது. அடுத்து மேனகா சத்தியா விருது வழங்கும்போது என்னை மறப்பதேயில்லை.

அடுத்து ஜலிலாக்கா இவர்களை தமிழ்குடும்பத்திலேயே அறிமுகம்  அவர்களின் விருது. அடுத்து ஜெய்லானி அப்பால நான்கொடுத்த மலர்விருதை இப்பால எனக்கே கொடுத்தது.

அடுத்து சைவக்கொத்துப்பரோட்டா. என்மூலம் என்மச்சானுக்கு ராஜகிரீடம் தந்தது.
மீண்டும் ஜெய்லானி தானே சொந்தமாக வைரவிருது செய்துதந்து வாசலில் மாட்டச்சொன்னது.  ஸாதிக்காக்கா தந்த வைரக்கிரீடம்.
மகராஜன் தந்த ராஜகீரீடம். சசிகுமார்தந்த ராஜகீரீடம் விருது என

விருதுமழையால் உள்ளம் நனைந்து ஊற்றெடுக்கிறது நல்லெண்ணங்களும்
நல் சிந்தனைகளும் வளமிகுந்த கற்பனைகளும். விருதுகள் என்பது ஊக்கம்கொடுக்கும் உற்சாக டானிக். எண்ணங்களை தூண்டி,
இருளகற்றும் தீபம்.
ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்துகொள்ளும்போது அது இரட்டிப்பாகிறது. நான் பதிவுலகில் பாசத்தையும் அன்பையும் நட்பையும் அளவில்லாமல் அடைந்துள்ளேன் என்றால் அது மிகையாகாது.
என்னை இதுவரை முகம் பார்த்திராத பெரியவர்கள், என்னை தன் குழந்தையாகவே தத்தெடுத்துக்கொண்டதுதான் பெரியபாக்கியம்.
மகளே என்றழைத்து எனக்கு ஊக்கம்தந்து இன்னும் முன்னேறிவா என்ற வார்தைகளின்மூலம் ஊக்குவிக்கும் தாய்களையும்,  தந்தைகளையும் ,நேரில் ஒருமுறையேனும் பார்த்தேயாகவேண்டும்
என்ற எண்ணம் என்னுள்.
அதேபோன்று நட்புகளாக. என் உடன்பிறவா சகோதர சகோதரிகளாக.
உற்ற தோழிகளாக. நிறைய நிறைய. அவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலும் என்னுள்ளே! மிகுதியாய்..
எழுத்துப்பணிக்கென்று வந்துவிட்டோம் அதில் இடரில்லாமல் செல்லவெண்டுமென்பதே எனது எண்ணம்..

சில தளங்களின் அடுத்தவர்மனத்தை காயப்படுத்துவற்காகவே சிலவிசமிகளின் போக்குகள்.
அவரவர் தளமென்னும்போதும் பிறர் மனதை புண்படுத்தும் என்று தெரிந்தும். அடுத்தவர்மீது புழுதிகளைவாரியிறைப்பது காற்றில்பறந்துவந்து தன்மீதும் படியும், தன்கண்களில் விழுந்து உறுத்தும், என்ற எண்ணங்களில்லாமல் நடப்பது வேதனைக்குரியவிச[ய]ம்.


நல்லவைகளை எடுத்துச்சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய அறிவாளியுமில்லை.எல்லாம் அறிந்தவளுமில்லை. இருந்தபோதும்.
வாழ்க்கை கொஞ்சகாலம்,வாழும் காலம்வரை நன்மைகளின்பக்கமே நம் நட்புகளும். உறவுகளும். நம் பந்தங்களும் செல்லவேண்டும் என்பது என் ஆவல்!
அதற்காக என்னாலானவைகளை எடுத்துசொல்கிறேன் ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள்வசமே!

என்றும்
உங்களின் அன்பென்னும் ஆதரவையும்.
ஆதரவென்னும் கருத்துக்களையும்.
கருத்துக்களென்னும் ஊக்கத்தையும்.
ஊக்கங்களென்னும் விருதுகளையும்.
விருதுகளென்னும்
உங்களின் ஆத்மார்த்தமான அன்பையும் வேண்டும்
என்றென்றும் உங்களில் ஒருத்தியாய் உலாவர
விரும்பும்
உள்ளமாய் நான் நான் நான்...


பதிவர்களாக பவனிவரும்
பசுமை மனங்கள்
பாசத்தை பகிர்ந்தளிக்கும்
பண்புள்ள குணங்கள்

உலாவரும் வேளையில்
உற்சாகம்தரும் கருத்துக்கள்-இன்னும்
ஊற்றாய் ஊறிவா! ஊரறியவா -என
ஊக்கம்தரும் விருதுகள்.

முகமறியா முகவரிகள்
முல்லைப்பூவின் மணவிரியல்கள்
மாசுகளற்ற பரிமாற்றங்கள்
மனத்தேடல்களின் நினைவோட்டங்கள்

பதிவுலகில் பெற்றதெல்லாம்
பசுமரத்தானிகள் பல படிப்பினைகள்
பாருலகில் உள்ளதெல்லாம்-ஒன்றுகூடி
பங்குபோட்டுக்கொள்ளும் மனக்குறைகள்

புனிதபூமி சுழல்வதிலே
புண்ணியங்களில் பலவகைகள்
பதிவுலகின் சுழற்சியிலே
பண்படாதவைகளும் சிலவகைகள்

நல்லவைகள் எடுத்துக்கொண்டு
தீயவைகளை புறம்தள்ளுங்கள்
நடந்தேறட்டும் நாள்தோறும்
நமக்கான
நன்மையான காரியங்கள் ...

டிஸ்கி// அனுதினமும்வந்து கும்மிகள், அரட்டைகள்,மற்றும் ஆழமான அருமையான கருத்துக்கள் வழங்குவோருக்கு. அனைத்து விருதுகளும் அன்பளிப்பாய் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால்  அனுதினமும் வந்து ஊக்கம்தரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும்.
பார்வையிட்டு செல்லும் பண்பர்களுக்கும். என் அன்பான அன்பைத்தருவேன் எந்நாளும் இறைவன் உதவியால்!!!!!!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கலாச்சாரம் காலடியில்!



நாகரீகமது நாகரீகமது -வீர
நடைபோடும் காலம் –நவ
நாகரீகமது முற்றிப்போயிட
நாற்றமெடுக்கும் கோலம்!

நான்கு சுவற்றுக்குள்
நடக்கவேண்டிய நடப்புகளெல்லாம்
நாலு கால்களைவிட மோசமாக
நடந்தேறுதே
நட்ட நடுரோட்டிலெல்லாம்!

தமிழ்நாட்டுக்கென்றும்
தமிழருக்கென்றும் தனிமரியாதை –அதன்
தரம்கெடுப்பதுபோல் தட்டுத்தடுமாறுதே
தறுதலைகளின் மோகம்!

தான்தோன்றித்தனத்தால்
தட்டுகெட்டதால் மோகம் கூடிப்போக
தண்டவாள ரயிலின் ஓட்டதிலும்
தன்னை நோக்கிய கூட்டநடுவினிலும்
காமம் எல்லைமீற!

பதினெட்டு தாண்டாத
பச்சிளம் வயது பாவை-அது
செய்ததே அத்தனைபேர் மத்தியில்
அசிங்கமான வேலை -யார் நோக்கினும்
எனக்கென்ன கவலை
என்று திரியும் -இதுபோன்ற
மாந்தர்களின் நிலை

கண்கள்கூசிட மனமும் வெறுத்திட
காட்சிகளின் அவலம்
அதை சொல்லக் கூசிட
வார்த்தை தடுத்தும்
தெறிக்கிறதே கோபம்!

படிக்கும் வயதிலே பால்யதவறுகள்
செய்யத்துடிக்கும் பருவம்
இதை இவர்களின்
பெற்றோர்கள் முன்னால்
செய்துகாட்டினால்
பொருத்திடுமா நெஞ்சம்!

மேலைநாட்டவர்கள் நம்மவர்களால்
மேம்பட நினைக்க-இங்கே
மோசமானதே மேலைநாட்டைவிட
மேதாவிகளின் போக்கே!

வாழ நினைக்குமா வரையரையோடு
வரும் தலைமுறையாவது
வாழ்ந்திட நினைத்தால்
வஞ்சிக்கப்படாதே வாழ்நாளாவது...

என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை. 
இன்றை நவநாகரீக உலகத்தில் வயது வந்த
சில பிள்ளைகளின் ஆட்டங்கள் எல்லைமிறீப்போகின்றன 
அது எதுவரையில் என்றால்,
 ஓடும் ரயிலில் பலபேர் பார்க்க தன்னுடைய மானம் மரியாதை போனாலும் தன் அத்துமீறும் ஆசைக்கு இடங்கொடுத்து மடத்தைபிடிக்கமுற்படும் மங்கையர் திலகங்களாய் உலா வருகிறது இன்றைய சிலமாந்தர் [அவ] நிலாக்கள். கேட்டால் ஃபேஷனாம்.
இதை கண்ணால் கண்ட என் நண்பரின் கட்டுரையை படித்ததும் அதிர்ந்துபோய் நம்மினமா!பெண்ணினமா! இப்படியெல்லாம் நடக்கிறது என மனம்குமுறி எழுதிய வரிகளே உங்கள் முன் கவிதையாக.. என்ன உலகமிது என்று உலகத்தை குறை சொல்லி லாபமில்லை.. குறைகளனைத்தும்  கேடுகெட்ட மனிதர்களிடம் மட்டுமே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அன்பே உன் நினைவை!

நெஞ்சமெங்கும் நினைவலைகள்
நிலவில் உதித்த
மஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்
மடியில் கிடந்தேனே

மடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்
மனதுக்குள்
மஞ்சம்கொண்ட உன் நினைவுகள்
மரகத வீணை மீட்டிடவே!

அன்பைச்சொரிந்து அனுதினமும்
அலைபாய விடுகின்றாய்
அந்திவானம் சிவப்பதுபோல்
அதரம் சிவக்க வைக்கின்றாய்

குளிர்கால இரவுகளில்
கோடைவெப்பம் உன்னாலே
வெயில்கால தருணங்களில்
குளிரடிக்குது தன்னாலே

நினைவுகளின் தாக்கத்தால்
நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
உணர்வுகள்  மரித்தபின்னும்
உன்நினைவோடு நானிருக்க

ஒவ்வொரு மணித்துளியும்
ஓராயிரம் ஒளிக்கதிராய்
நிலையாக  நிலைத்திருக்க
ஒவ்வொரு நொடியும்
உருகி உருகி வேண்டுகிறேன்.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தடுமாற்றம்!


சுசிலா வழக்கம்போல் கணினியில் அமர்ந்தபடி தன் வேலைகளை தொடர்ந்தாள்.கைகள் டைப் செய்துக்கொண்டிருந்தபோதும் ஒருகணம் மனம் அவனை நினைத்தது.

ஒரு ஸ்டெனோவா அலுவலகத்தில் இருக்கும் சுசிலாவுக்கு ஒருமுறை சாட்டிங்க வழியே ஹரி என்ற நண்பனின் அறிமுகம் கிடைக்கவே தினமும் அவனிடம் 10 நிமிடமாவது உரையாடிக்கொள்வதுண்டு.
இதுவே 2 ,மாதங்களாக தொடர்ந்தது. தோழமைகளான நட்பு சற்றுவிரிவடைந்து காதலானது.

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை இருந்தபோதும் நெருக்கம் கூடியது, வார்த்தைகள் தேன்தடவி விளையாடியது, வானவில்லின் வண்ணங்களை கண்முன்கொண்டுவந்து கொட்டியது.

இருவருமே திருமணமானவர்கள்.
ஆனபோதும் ஏதோஒன்று இருவரையும் இணைத்துப் பிணைத்தது.
இது இருவருக்குமே தவறு என தெரிந்தபோதும் ஏனோ மனம் பிடிவாதமாய் தவறில்லையென வலுக்கட்டாயம் செய்தது.

நாட்கள் செல்லச் செல்ல மனம் பதைபதைப்புக்குள்ளாகியது
ஒருமுறை கணினிவழியே பேசிக்கொள்ளவிட்டாலும் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தாள்.

ஒருநாள் தன் அன்புக்கணவன் சுந்தரிடம் இதைசொல்லிவிடலாமா என எண்ணிக்கொண்டே அருகே அமர்ந்தாள்.
குடும்பத்தின் சிலசூழல்களை அவன் சொல்லத்தொடங்கியதும் தான் சொல்ல வந்ததை சொல்லாமலே அவன் மார்பில் முகம்புதைந்து அழுதாள்.

ஏன் ஏன்னென்று அணைத்தபடி அவன் கேட்டும் சொல்லமுடியாமல் கண்ணீரை துடைத்தபடி ஒன்றுமில்லைங்க என சொன்னவளாய் மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

மனம் ஒரு குரங்கு அது நினைத்த இடத்திற்கு தாவ நினைக்கும்
அதன் வழியிலேயே விட்டுவிட்டால் நாசம்தான் மிஞ்சும்.
தன்வாழ்க்கையில் எக்குறையும் இல்லாமல் வாழ்ந்துவரும்
நாம் எதில் சரிக்கினோம்?
எதற்கு மற்றவரின் வார்த்தையில் மயங்கினோம்?
வார்த்தைகள் அத்தனை வலிமையானதா?
தவறிட இருந்தோமே!
நல்வாழ்க்கையை தொலைக்க நினைத்தோமே!
என்று எண்ணிக்கொண்டே
தன்னையே சற்றுநேரம் தாழ்ந்தவளாய் நினைத்தாள்

மனம்போனபடி வாழ்வதா வாழ்க்கை, இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதானே வாழ்க்கை, எப்படிவேண்டுமென்றாலும் வாழலாம் என்பது வாழ்க்கையல்லவே!
என்பதை அவள் மனம் அவளுக்கு உணர்த்தியது.

மறுநாள் காலை ஒருமுடிவெடுத்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தவள், கணினியை கண்டதும் அவன் நினைவுவர அப்படியே புறந்தள்ளிவிட்டு ஆன்மாவுக்குள் ஆண்டவனை நினைத்தாள்
தவறுதலாக தவறை செய்துவிட நினைத்தேன், அதனை தவறென்று உணர்த்தி, என்னை உன் தண்டனையிலிருந்த காப்பாற்றிய கடவுளே! உனக்கு கோடான கோடி நன்றி
என்று நெஞ்சம் உருக கண்ணீர் வழிந்தது.

உள்ளம் புயலுக்குள் சிக்கிமீண்ட உணர்வை உணர்ந்தாள்
மனம் இப்போது தென்றலின் சுவாசத்தை உள்வாங்கியபோது
நெஞ்சுக்குள் நெகிழ்ச்சியாய் சில கவிதை துளிகள் தெறித்தது..


தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
தவறிழைத்துக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை

மனமே...!
நீ தவறிழைப்பது இயல்பு - அதுவே
தொடர்வது அழகற்ற மரபு....

மனிதன்
தவறிச்செய்யும் சிறு குறும்பு - அதுவே பின்னால்
யானைக் காதில் புகுந்த எறும்பு....

தவறை செய்து விட்டபின் மனமே....
தவறுவதிலிருந்து திரும்பு - அதுவே
உனக்கு நீயே கொடுக்கும் மருந்து....

மனசாட்சியோடு வாழ்வது சிறப்பு....
அதை துறந்து வாழ்வது - உனக்கு நீயே
தேடிக்கொள்ளும் இழப்பு

மனம்போல் வாழ்வதா அழகு - உன்
மனசாட்சியில் வேண்டும் நலவு -அதனால்
மனதோடு
மல்லுக்கு நின்று பழகு...

 
டிஸ்கி// இன்று இப்படி நாளை எப்படி? என்பதைக்கூட விளங்கமறுக்கும் கூட்டமாக தற்கால சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு சீரழிந்தும். சீரழியப்பார்க்கும். மனங்கள் ஏராளம்.
அதிலிருந்து நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ள தன்னைதானே தெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமல்லவா?
 இதுபோன்று நிறைய நடக்கிறது.அதுதான் இப்படி கருவை வைத்து, எழுதத்தூண்டியது. எழுதியது சரிதானே? எதுவென்றாலும் சொல்லுங்கள்.

கதைக்குள் கவி என்று. என்னுடைய இந்த குட்டிக்கதை கவி. 
சார்ஜாவில் இருக்கும் சீமான் அமைப்பின் 
ஆண்டுமலர் புத்தகத்தில் வெளியாகியுள்ளது . அதில்,
இதிலுள்ள பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு வெளியாகியிருக்கிறது.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வாஞ்சை!!!

வெள்ளைக்காகிதத்தில்
வரைந்து முடிக்கவில்லை
மலரை
வந்தமர்ந்தது வண்ணத்துப்பூச்சி

வாசத்தை காணவில்லை
வண்ணங்களும் இதற்கில்லை
ஆனாலும்
அழகிய மலராக
ஆடி நிற்பதைக்கண்டு
அது வாடிடக்கூடதென்று
தன் பட்டுச்சிறகை
கருத்த மலரின் உடல்மேல்
மெல்லவிரித்து-தன்
வண்ணங்களை உதறியது

பென்சிலின்
கருநிற உதட்டால்
உடல்பெற்ற மலரோ
வண்ணங்கள் பட்டதும்
உயிர்பெற்று எழுந்தது
வனப்போடு நின்ற
மலர்மேனியைக்கண்டதும்
வண்ணத்துப்பூச்சி
மெளனமாய் -தன்
முகம்கொண்டு
வாஞ்சையோடு உரசிச்சென்றது

வண்ணமில்லா
வாசனை இல்லா
மலர்கூட
வண்ணத்துப்பூச்சியின்
வாஞ்சையினால்
வசந்தம்பாடி நின்றது...

//டிஸ்கி ஒரு நாளுன்னு சொல்லி ஒரு வாரம் லீவ் எடுத்தாச்சி.பள்ளிகூட்டத்தில் எடுப்பதுபோல். லீவில் சும்மா இருந்தா எப்புடி அதான் கொஞ்சம் வரஞ்[ரைந்து]சிபார்ப்போமுன்னு.
அதென்னன்னா இப்படி ஆகிப்போச்சி சரி எவ்வளோ சகிச்சிக்கிட்டீக இதையும் அப்படியே அப்படியேஏ... நல்லாக்குதான்னு சொல்லிட்டுபோங்க//


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



தமிழ்புத்தாண்டில்
தழைத்தோங்கட்டும்
தங்கத்தமிழரும்
சங்கதமிழும்

இந்தப் புத்தாண்டு முதல்
நீங்கள் எண்ணியயாவும் கைகூட
நினைத்தது எல்லாம் ஏற்றமுடன் நடக்க
இனிதாய் வாழ்வு சிறக்க

ஏக இறைவனை
இறைஞ்சி புகழுங்கள்
இன்பமாய் வாழுங்கள்
அனைவருக்கும்
வளங்கள் பெருகிட

வாழ்வு சிறந்திட
எல்லாம் வல்ல இறைவனை
என்னாலும் வேண்டுகிறேன்..

//டிஸ்கி//ஒரு நாளைக்கு லீவ் கொடுங்கப்பா வெள்ளக் காக்காக்கு கண்ணுபட்டுப்போச்சி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கதைகேளு கதகேளு கிரேண்மாவின் கதகேளு![தொடரோ தொடர்]


இந்தபதிவ எழுத அழைத்த அக்பருக்கும் பல்சுவை நிஜாமுதீன் அண்ணாவுக்கும் மிக்க நன்றி,

என்ன கத சொல்லுறதுன்னு யோசிச்சப்ப மண்டையில எதுவுமே தோனல.
இப்புடி தோன்றும் அங்கே ஏதாவது இருந்தாத்தானேன்னு. நம்ம ஹுசைன்னமா கேக்குறதுபோல தெரியுது.
இருந்தாலும் புதுசா ஒரு கத சொல்லுறேன் கேளுங்க
படிச்சிட்டு இது புதுசான்னு கேட்டவங்களுக்கு.
மங்குனி அமைச்சரிடம் சொல்லி மங்குனி சீடி அனுப்பிவைக்கப்படும்..


ஒரு ஊர்ல கிரேண்மா கிரேண்மா ஒரு பாட்டி இருந்தாங்களாம்
[அச்சோ கிரேண்மான்னாலே பாட்டிதானே சும்மா இடையில் கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது ஓகே.]


அவங்க எப்போது வடைசுடுவாங்களாம்[ஜலீக்கா விதவித சுடுவது போலவல்ல] வடை சுட்டு போரடிச்சிபோச்சின்னு அன்னிக்கி ரெஸ்ட் எடுத்தாங்களாம், அப்போ அங்கே வந்த வெள்ள காக்காவுக்கு அதர்ச்சியா போச்சாம் அச்சோ இந்த கிரேண்மா இன்னக்கி வடை சுடலையேன்னு.


பசிதாங்காமுடியாத வெள்ளக்காக்கா  எப்படியும் இன்னிக்கி ஓசியில[என்னவோ எப்போதும் காசுகொடுத்து துண்ணுரதுபோல] வடை திங்கனுமேன்னு வெ வெ வே ந்னு கத்திக்கிட்டே[என்ன காக்கா
கா கான்னுல்ல கத்தும் அச்சொ இது வெள்ள காக்கான்னு சொன்னேனே] பறந்து திரிஞ்சிசும் ஒன்னும் கிடைக்கலையாம் அப்படியே வந்துகிட்டு இருக்கும்போது

திருட்டு நகையெல்லாம் வாங்கும் பிளாக்[கருப்பு] சேட்டு கடைபக்கம் பறக்கும்போது கடையிக்குள்ளே சேட்டுக்கு முன்னாடி ஒரு சில்வர் தட்டுல வட்டமா இருந்த தங்கக்காயின  பார்த்த வெள்ளக்காக்காவுக்கு ஆகா வடையிருக்கே!
அதுவும் வித்தியாசமா ஹோலில்லாமயிருக்கே!
கடைக்குள் இருப்பதால் வடை இப்படிஈ மொய்காம மின்னுதோ எப்படியிருந்தாலும் சரி இத எடுத்து சாப்பிடனும் அப்பதான் இன்னக்கியுள்ள பசிபோகுமுன்னு நெனச்சிகிட்டே
எதிர்தமாதரி உள்ள மரத்துல நின்னுகிட்டே[எப்படி உக்கார முடியும் அதாலா?  முடியும் நீ பாக்கலனா விடு விடு] கண்கானிச்சிகிட்டே இருந்திச்சாம் அப்போன்னு பாத்து சேட்டு போட்டிருந்த தொப்பி சரிந்துவிழ அத எடுக்க குனிஞ்சப்ப வெள்ள காக்கா காயின அபேஷ் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சாம்


அச்சோ என் காயின் தங்கக்காயின்  புடிங்கன்னு சேட்டு காக்கா பின்னாலேயே கத்திக்கிட்டு ஓட,
காக்கா பறந்துவந்து கிரேண்மா வீட்டுமேல உக்காந்து வாயில் இருந்த வடையின்னு நெனச்ச காயின கையில் //ச்சே// காலில் பிடிச்சிக்கிட்டு.


கிரேண்மா கிரேண்மா நீயும் சுடுவியே வடையின்னு சொல்லி ஒரு வீணாப்போன வடைய அதில வேற ஓட்டைய போட்டு மாவையும் ஆட்டயபோட்டுடுவ,
இதபாத்தியா மினுமினுன்னு சும்மா சோக்கா மின்னுது இதுதான் வடையின்னு சொன்னப்பத்தான்
அதஉத்துப் பார்த்த கிரேண்மாவுக்கு ஆகா இது
அதுவாச்சேன்னு மனசுக்குள்ளே தந்திரம் ஓட,

வெள்ள காக்கா
வெள்ள காக்கா அது வடையில்லப்பா உனக்கு அது சாப்பிடமுடியாது நாவேறவடை தர்றேன் இதை எனக்குதான்னு கேக்க


ஆங் அஸ்கு புஸ்கு
நானே கஸ்டப்பட்டு அலஞ்சி உழச்சி இத கொண்டு வந்திருக்கேன் இதபோயி கேக்குறியே! எனக்கு பசிக்கிது நான் சாப்பிடனுமுன்னு நீ போன்னு சொல்லி சாப்பிடப்போகும்போது



கிரேண்மா சொல்லிச்சாம் காக்கா காக்கா
நீ வெள்ளயா இருக்குறதால ரொம்ப அழகாயிருக்க அதனால கண்ணுபட்டுவிடும் இந்தா மொதல்ல இந்த கருப்புச்சட்டைய போடு இல்லன்னா மத்த காக்காவெல்லாம் உம்மேல பொறாமப்படுமுன்னு சொல்லிச்சாம்


உடனே காக்காக்கு மனசுக்குள்ளே மத்தாப்புபூத்திச்சாம், மத்தக் காக்கயவிட நாமா ரொம்ப அழகாயிருக்கோமாம் அதுவும் வெள்ளையாவேறயிருக்கோமாம் சரிதான் கண்ணுபட்டுட்டா கருத்துபோயிடுவோமுன்னு நெனச்சிக்கிட்டே


காலிலுள்ள தங்கக்காயினையும் பாத்திச்சாம்  கிரேண்மாவையும் பாத்திச்சாம்
அப்ப கிரேண்மா சொல்லிச்சாம்


வெள்ள காக்கா வெள்ளக்காக்கா நா சுடும் வடையப்போல இந்த வடைய  நீ பிச்சி சாப்பிட முடியாது கொடு நான் உரலுல இடுச்சு தாறேன்
அதுக்குள்ளே இந்த கருப்புச்சட்டையபோடுன்னு சொன்னதும்


ஆகா இது நல்ல ஐடியாவாயிருக்கேன்னு,
கிரேண்மா கிழவி நீ ரொம்ப நல்லவுகளா இருக்கீயே!
சரி இந்தா நல்லா இடிச்சுதான்னு தொப்புன்னு கீழேபோட்டுச்சாம் வெள்ளகாக்கா தங்காயின

ஓடிவந்த கிரேண்மா தங்காயின எடுத்துகிட்டு பக்கத்தில் கிடந்த கரிக்கட்டை எடுத்து இந்தா காக்கா சூ சூ ஓடிப்போயிடு இல்லேன்னா வடை சுடும் அடுப்பில வச்சி உன்னச்சுட்டுடுவேன்னு சொன்னதும்
வெள்ளக்காக்கா அச்சோ கிழவி நம்மை ஏமாத்திவிட்டதேன்னு சொல்லி
மல்லாக்க பறந்துபோச்சாம்...

//டிஸ்கி //அய்யோடா இதுக்குபேரு கதையா?

கதச்சொல்லச்சொன்னா கதவிட்டுகிட்டிட்டு இருக்கியே!
எத்தனை தபா இந்தகதய கேட்டிருப்போம். இதுக்கு நீ சொல்லாமலே இருந்திருக்கலாம் அப்படின்னு நெனச்சீங்கன்னா. அதுக்கு நான் பொறுப்பல்ல
பச்சக்கொய்ந்தயபோய் கத சொல்லுன்னு சொன்ன இந்தமாதரிதான் சொல்லும். வெவெவ்வே

சின்னப்புள்ளயபோய் கத சொல்ல சொன்ன நம்ம அக்பருக்கும். நிஜாமுதீன் அண்ணாவுக்கும் அடியகொடுப்பீகளோ அவார்ட கொடுப்பீகளோ எது கொடுத்தாலும் அவங்களுக்கு கொடுங்க. கருத்தையும் ஓட்டையும் மட்டும் எனக்கு கொடுங்க! எப்புடி
ஆகாமொத்தத்தில் என்றைக்கு சொன்னாலும் கத கததான் அந்த கதையில் மாற்றம் வரனுமுன்னா மனிதனிடம் முதலில் மாற்றம் வரனும் என்ன நான்சொன்னது சரிதானே!

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவங்க இருப்பாங்க இல்லையா
நீங்க ஏமாறுறவங்களா? ஏம்மாத்துறவங்களா?
இல்லையின்னா அந்த ரெண்டு பேரையும் திருத்துற நல்லவங்களா.?
இல்லை யார் எக்கேடு கெட்டும் போகட்டும் நமக்கென்னன்னு போறவங்களா?
நீங்களே முடிவெடுங்க! எதுவாக இருக்கோனுமுன்னு.
நான் எப்போதும் ஏமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! கப்பா ...

அப்பாடா கதைகேட்டு முடிச்சவங்க களைச்சி போயிருப்பீங்க, அதனால இந்தாங்க இதுல எதுவேணுமோ கலக்கிகுடிசிட்டு தெம்பா போங்க ஏமாத்தவோ ஏமாறவோ!
என்ன செய்ய ஏமாற்றக்கூடாதேன்னு வீட்டில் இருக்கிறதவச்சி போட்டோ எடுத்துப்போட்டா
இல்லாதத கேட்டு ஏமாறுகிறேன்னு நிக்கிறவுகள என்னச்செய்ய
பேபின்னு நெனப்பு இந்த ஜெய்லானி அண்ணாவுக்கு அதான் இன்னமும் அமுஸ்பிரே கேட்குது..

அட நம்ம நாடோடி ஸ்டீபனின் ரகசியம் இந்த பூஸ்ட் டிலா


இல்லாதத இருக்கிறதா போட்டுட்டேன் எடுத்துக்குடிச்சிட்டு
ஏமாறுங்க! ஏமாறுங்க!

இதுக்கெமேல யாரும் கதை சொல்லனுமுன்னு தோனிச்சின்னா
ஸ்டாட் மியூசிக்.. தொடர்ந்து கொல்லலாம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

சந்திப்பு தந்த தித்திப்பு.

[அண்ணன் தங்கியிருக்கும் இடத்தில். என்தோழியின் மகள் ஜுல்பியா]

கடந்த வெள்ளியன்று காலை 11 30. லிருந்து படபடப்பு மனதில். 3. 4. வாரங்களாக இதோ இதோ என்று தள்ளிப்போய்கொண்டேயிருந்த சந்திப்பு


இது இன்று நடைபெறப்போகிறது.மனமெல்லாம் மகிழம்பூவின் வாசனையோடு
குட்டிப்போடபூனையாக நடை.11 30. தோழிவீட்டுக்கு வந்துவிட்டேன். அங்கிருந்துகொண்டு போன் செய்தேன். அக்கா இன்றுமாலை சந்திக்கிறோம்.
நான் அங்குவரவா இல்லை நீங்கள் இங்கு வருகிறீர்களா?
அச்சோ போனின் உள்ளே சந்தோஷ மூச்சி சாரலாய் அடித்தது.
என்ன செய்வோம் நான் எங்கு வர.அங்கிருந்த குரல்,
சரிக்கா மாலை 4. 30மணிக்கு ஃப்ரைடே மார்கெட்டுக்கு வாங்க
அங்கே சந்திப்போம் ஓகேபா வந்துவிடுகிறேன்.
உனக்காக தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு என்றார்கள்.

நேரம் நகர்ந்தபாடில்லை தொழுகைமுடிந்து சாப்பிட்டு மணியைபார்த்தால் 2.15..தான்
என்னசெய்வது 4. 30 நல்ல வெயிலாகயிருக்குமே! என்று திரும்ப போன் செய்தேன் அக்கா நான் அண்ணவீட்டுக்கு[பெரியம்மா மகன்] போய்விட்டு 5. 30 வருகிறேன் வரும் போது போன்செய்கிறேன் அப்போது கிளம்பிவந்தால் போதும் சரியா. சரிப்பா வந்துவிடுகிறேன்.

எடு காரை போ கவானிஜ் க்கு. நாங்க இருந்த இடத்திலிருந்து ஒரு 90 . 95 .கிலோமீட்டர் விடு சூட். அண்ணன் தங்கியிருக்கும் இடத்துக்குபோய் ஒட்டகபாலாவது அருந்திவிட்டுவரலாமுன்னு போயாச்சி.நாங்கம் தோழிவீட்டிலும் சேர்ந்து.
அங்குபோய் அண்ணிடமிருந்தெல்லாம் சுருட்டிக்கொண்டு,
 சூடான நேரத்தில் ஒட்டகப்பால் சூடு என்பதால் ஜில்லுன்னு டீ குடிச்சிட்டு.

[இந்த ஒட்டக்கப்பால் குடிக்கத்தான் சென்றோம்]


மணல்மலையில் ஏறிவிட்டு அப்பாடா என இறங்கி அண்ணாவுக்கு டாட்டா காட்டிவிட்டு. திரும்பினால் மணி 5 .50. போன் செய்து அக்கா நீங்க அத்தனை தூரம் ஃப்ரைடே மார்கெட்டுகெல்லாம் வரவேண்டாம் உங்கவீட்டுக்கு மிகபக்கம்தானே லூலூ சென்டர் அங்கே வாங்க அதுவும் நான் அங்கு வந்து நான்மிஸ்கால் அடித்ததும் என்றேன். ஏனென்றால் தனியா அவர்கள்மட்டும் வரனுமே அண்ணாத்தேக்கு வேலையிந்ததால்.

லூலூ போயாச்சி பார்கிங் செய்துகொண்டே போன் செய்தேன் அக்கா இப்ப வாங்கன்னு. நான் வந்துட்டேன் [ஆல்ரெடி அயம் கம்மிங்] உள்ளேதான் நிற்கிறேன் என்றார்கள்.சரி என்னை எப்படித்தெரியும் அவங்களுக்கு [எனக்கு தெரியும் அவங்களை எப்படி இரண்டு நாளைக்குமுன்னாடி போட்டோ அனுப்பினாங்க பார்த்துவிட்டோமுல்ல] அதனால நீங்க என்னை கண்டுபிடிச்சிடுங்கப்பா என்றார்கள்.

என் திட்டம் எந்தோழியை நான்தான் மல்லி என போய் அறிமுகபடுத்திக்கோ என சொல்லி அழைத்துச்சென்றேன் ஆனால் அவள் இடையில் ஹாஸ்பிட்டல்போகனும் என்ற சூழல் அதனால் நானே உள்ளே சென்றேன் மச்சானும் மகளும்கூட.

உள்ளே நுழைந்து அந்தபக்கம் பார்த்துவிட்டு இந்தபக்கம் திரும்பும்போது எதிரே ஒரு ஆள் பெட்ஷீட் டவல் என இருந்ததில் ஒன்றை எடுத்து விரித்து பார்த்துக்கொண்டிருந்தது முகம் நான் போட்டோவில் பார்த்ததுபோல்தான் இருந்தது சற்று வித்தியாசமாய்.

அருகே சென்று லேசாக உரசியதுபோல் நின்றேன் ஆளுக்கு பயம் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் குனிந்தே என்னவோ அதை எடுக்கப்போவதுபோல் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இன்னும் நெருக்கமாக நின்றேன். திரும்பி என்னை பார்க்கும்போது அணைத்துக்கொண்டேன் அக்கா என்று. அப்படியே அக்கா அதர்ச்சியில் பார்கனுமே அந்த கண்கொள்ளாகாட்சியை.

என்னை பேஷ் கவர்செய்தே பார்த்திருந்ததால் நான் பர்தாவில் ஃபேஷ் கவர் செய்து போவேன் என எதிர்பார்திருந்தார்கள் [அவர்களுக்கு ஷாக்கொடுக்க அதை சற்று நீக்கிவைத்திருந்தேன்] சொல்வார்களே பாசம் இடமறியாதுன்னு
அதுபோல அங்கேயே கைகளைபிடித்தபடி சற்று மெளனமும் சிரிப்பும்.

[கொழுக்கட்டையைசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நினைவுவந்தும் கிளிக்]
 உடனே அக்கா சிறிய பேக் கையில் கொடுத்து இந்தாப்பா உனக்கு பிடித்த கொழுக்கட்டை என தந்தார்கள்.
சரி இங்கே இருந்து பேசமுடியாது லூலூக்கு பின்னால் பார்க் இருக்கு அங்குபோவோமென அங்கு சென்று அமர்ந்தோம் சிறிய மகனாரை அழைத்துவந்திருந்தார்கள்.அப்படியே அம்மாபோல நாந்தான் அண்ணாவை பார்தில்லையில்ல அதான்.

பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்
இடையில் ஹாஸ்பிட்டல் போனதோழி வந்துவிட்டாள். அக்கா கொண்டு வந்திருந்த கொழுகட்டையை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டோம் சர்கரை கொழுகட்டை செம சூப்பர். அதற்கிடையில் எங்க ஊர் தோழிகள் அந்த பார்க்குக்குதான் எப்போதும் வருவார்களாம் அவர்களும் வந்துசேர[ரொம்ப நாள்கழித்துதான் அவர்களையும் பார்த்தேன்] அப்பப்பா சந்தோஷதின் உச்சியில் அப்போது.


என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.[என்ன நான் கொஞ்சம் குனிந்து நின்றேன். அக்கா சொன்னார்கள் முன்பே தெரிந்திருந்தால்
ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருப்பேனப்பா] எனக்காக சின்ன பர்ஸ் அக்கா தந்தார்கள் அதை திறக்கும்போதெல்லாம் என் நியாபகம் வரனுமென்று.அதில் 1 திர்கம் காயின்வேறு. அப்போதுபார்த்து என் கவிதை [மாண்பின் ஆட்சி]
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்காக நான் எழுதிய கவிதை.


இனியதிசைகள் புத்தகத்தில் வந்துள்ளது என அண்ணன் வந்து தந்தார்கள். மகிழ்ச்சி பன்மடங்கானது..

 பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை அக்காவின் அத்தான் போன் செய்யும்வரை.மணியைபார்த்தால் 7. 45. அச்சோ நேரமாகிவிட்டது நான் கிளபுகிறேன்பா. என்றார்கள். வாங்கக்கா லூலூவுக்குபோய்விட்டு போகலாமென்றேன் இல்லப்பா நேரமாகிவிட்டகாரணித்தினால் மீண்டும் சந்திப்போம் என்றார்கள் சரியென பிரியமனமில்லாமல் கைகளைகொடுத்தபடி அப்படியே சில மணித்துளிகள்.


விரல்களுக்குள் வீணைமீட்டிய நேசம் விடுபடமுடியாமல் விட்டு விலகியது.
போய்வருகிறேன் எனச்சொல்லியபோதுமனம் கனத்ததுபோலிருந்தது
அதை காட்டிக்கொள்ளாமல் இருவரும் அணைத்துக்கொண்டு சென்றுவருகிறேன் என்று போய்விட்டார்கள். போனபின்னும் நெடுநேரம் அமர்ந்திருந்தோம் மற்றதோழிகள் அவர்கள் அத்தான்கள்.என மணி 10.25 கிளம்பிவிட்டோம் வீடுவந்து சேர 11 மணியாகிவிட்டது.


அதுசரி இவ்ளோ நேரம் படிச்சிகளே நான் யாரை சந்திச்சேன்னு நினைக்கிறீங்க!
அதை தெரிஞ்சிக்கனுமுன்னா இதை கிளிக் பண்ணுங்க

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.


உதிர்ந்துவிடும் மலர்களைப்போல் ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பல உள்ளங்களில் வேர்விட்டு உறுதியாய் உதிராமல் வாழ்ந்திடவேண்டும்.
இன்னும் இந்தப்பதிவுலம் எத்தனை எத்தனை மகிழ்சியையும் சந்தோஷங்களையும் தரக்காத்திரிக்கிறதோ!
அதற்காக நானும் காத்திருக்கிறேன்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

சோறுபோடும் சேறு!


காலக்கருக்களிலே களத்துமேடு போறமச்சான்”
காலக்கருக்களிலே களத்துமேடு போறமச்சான்”
கடக்கண்ணக் காட்டிடுங்க
கஞ்சிகொண்டு நானும் வாரேன்
சோடிசேந்து போவோம் -அந்த
சேத்தில் இறங்கி உழுவோம்
சோந்து போயிடாம -எடயில்
கஞ்சியையும் குடிப்போம்


செக்கச்சிவந்தபுள்ள சீமக்கார செவத்தபுள்ள”-அடிச்
செக்கச்சிவந்தபுள்ள சீமக்கார செவத்தபுள்ள”

சுள்ளுன்னு வெயிலுபட்டா
சுருங்கிபோகும் ஓவ்வுடம்பு

சூடெல்லாம் தாங்கமாட்டே
வீட்டிலேயேயிருடி நாமட்டும் போய் வாறேன்
வயலுவேல முடிஞ்சி அடி சொனங்கிடாம வாரேன்-
.
மாமென்பெத்த மன்னவனே! ஏம்மனசுகேத்த சின்னவனே!
மாமென்பெத்த மன்னவனே! ஏம்மனசுகேத்த சின்னவனே!

செக்கச் செவந்தமேனி யானாலும்
செல்லச்சீமாட்டியா பொறந்தாலும்
செத்தபின்ன வெத்துடம்பு

செத்துப்புட்டா மண்ணுக்குதான்
நானுங்கூட வந்து ஒங்கூட நாத்து நடவ வேணும்
நாகரீகம் பாத்தா அட நம்ம வயிறு காயும்


வேணான்டி அன்னக்கிளி வேற வேல ஊட்டுலபாரு

வேணான்டி அன்னக்கிளி வேற வேல ஊட்டுலபாரு


வெள்ளாம நமக்கு வேணாம்
வெவசாயம் ஒண்ணுவேணாம்
வெளச்சலும் சரியில்ல
வரவுங்கூட ஒன்னுமில்ல
விட்டுப்புட்டு போயிடலாம்
வேற வேல பாத்துக்கலாம்
வெளி நாடுபோயி அங்க வேல கீல பாப்போம்
வெள்ளக்காரங்கபோல நாம வசதியாக இருப்போம்
அச்சச்சோ ஆசமச்சான்அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
அச்சச்சோ ஆசமச்சான் அப்படியெல்லாம் சொல்லாதீங்க!

வெள்ளாம அழிஞ்சுபோகும்
வெவசாயம் நின்னுபோகும்
விட்டுபுட்டு போயிவிட்டா
வெட்டவெளியாகி போகும்
வெவரமில்லாம பேசாதீங்க
வெளுத்ததெல்லாம் பாலுமில்ல
வெள்ளாமையில் உள்ள சுகம்
வேறெதிலும் அங்கேயில்ல
வெளிநாட்டு பேச[ஷ]ன் அது எல்லாமே மோசம்
வேல இல்லாம போனா அட வெவகாரமாகிபோகும்


மாமிபெத்த மரிக்கொழுந்தே ஏம்மனசுகேத்த மகிழம்பூவே
மாமிபெத்த மரிக்கொழுந்தேஏம்மனசுகேத்த மகிழம்பூவே

மனகண்ண தொறந்துப்புட்ட
மனசக்கூட உசுப்பிவிட்ட
மடப்பய மண்டையில
மதியைக்கூட தூண்டிவிட்ட
காலக்கொஞ்சங் காட்டு நாதண்ட கொலுசுபோட
காத்திருக்கேன் வாடி நாமசோடிசேந்து போவ


அப்படிபோடு கருத்தமச்சான் நாஞ்சொன்ன கருத்தக்கேட்ட
அப்படிபோடு கருத்தமச்சான் நாஞ்சொன்ன கருத்தக்கேட்ட

சும்மாட்ட தலையில் வச்சி
சுமந்துவாரேங் கஞ்சிக்கூட
சோடி சேந்து போய்வரலாம்
சுகமாக வாழ்ந்திடலாம்
சேந்து நாமபோவோம் அந்த
சேத்தில் இறங்கி உழுவோம்
சோந்து போகமாட்டோம் எப்பவும்
சுறுசுறுப்பா இருப்போம்.....
[டிஸ்கி;;;நாட்டுப்புற பாட்டப்போல படிச்சுப்பாருங்க
நல்லாயிருந்த கருத்தயும் ஓட்டையும் போடுங்க!]


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

ஒரு சொட்டேனும் சேமியுங்கள்!


நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது

பிறப்புமுதல் இறப்புவரை
தொடர்ந்துவரும் நீரும் இது
இவ்வுலத்தையே சுற்றிவளைத்து
ஆட்சிசெய்யும் தண்ணீர் இது!

ஒருதுளி நீருக்குள்ளே
உருவாகும் உயிர்களிது
பத்துமாதம் பத்திரமாய்
பனிக்குடமென்னும் தண்ணீருக்குள்
உயிர்வாழுமது!

அழுதுகொண்டே பிறக்கும்போது
தண்ணீர் வரும் கண்ணீராக
அள்ளியணைத்து அன்னைதருவாள்
தன் நீரைக்கலந்த அமுதமாக!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

தேகம் கழுவ வேண்டும்தண்ணீர்
தேனீர் அருந்த வேண்டும்தண்ணீர்
பயிர்வளர்க்க வேண்டும்தண்ணீர
பசுமைக்கொஞ்ச வேண்டும்தண்ணீர்!

கொடும் பசியைக்கூட அடக்கிவிடும்
கொஞ்சம் தண்ணீர்
கொடும் பாவியையும் தவிக்கவிடும்
கொஞ்சம் தண்ணீர்!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

கடலோடு உறவாடி
தண்ணீரை
களவாடும் கருமேகங்கள்
பஞ்சம் விரித்தாடும் நேரத்தில்
கண்ணீரை துடைத்து
பசிபோக்கும் சிறுதூறல்கள்!

வான்மழை தண்ணீரை
தானம் தரும் நேரத்தில்
வரவேற்று வீட்டில் வைக்க
தொட்டிகட்டு
சொட்டு சொட்டாய் சேகரித்து
நிலத்தடியை குளிரூட்டு!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

உயிருக்கு உயிர்கொடுக்கும்
உன்னத தண்ணீரை
ஒருபோதும்
உயிர் நோகச்செய்யாதே
ஒவ்வாத மாசுகளை
நன்நீருக்குள் கலக்காதே!

ஐம்பூதங்களில் ஒன்றான தண்ணீரை
அளவுக்குமீறி அவதிகள் செய்யாதே
அவசியமில்லாமல் அத்துமீறி புழங்காதே
பத்திரமாய் பாதுகாத்து பதப்படுத்து
ஒரு சொட்டு
தண்ணீரேனும் சேகரித்து.....

[இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது