நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெருமை...



தற்பெருமை கொள்ளல்
தனதான நாசம்
பெருமை கொள்ளல்
தனக்கான நேசம்

எல்லாமும் நலமோடு
ஏகயிறைவன் நம்மை
படைத்ததையெண்ணி
பெருமைப்பட்டுக்கொள்

ஏற்றத்தாழ்வு வாழ்வினில்
ஏதேனும் ஒன்று
ஏற்றமிருந்தாலும்
பெருமைப்பட்டுக்கொள்
 
புகழ்ச்சியற்ற    
புகழாரம் கிடைக்கும் தருணம்
புன்னகையோடு
பெருமைப்பட்டுக்கொள்

உன்னத அன்பு
உனைதேடி அடைந்தால்
உணர்வுகள் உருக
ஒரு சொட்டு கண்ணீர்விட்டு  பெருமைப்பட்டுக்கொள்

என்னால் மட்டுமே முடியுமென்ற
இறுமாப்பு கலைந்து
என்னாலும் முடியுமென்ற நம்பிக்கை  
உன்னக்குள்  உண்டெனில்     பெருமைப்பட்டுக்கொள்

யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள்
எளிதில் உன்னை வந்தடைந்தால்
உனது திறமை எண்ணி
உளமார    பெருமைபட்டுக்கொள்

கொஞ்சம் அழகோடு
நிறைந்த மனதோடு
விட்டுக்கொடுத்து வாழும்
வாழ்க்கைத்துணை அமைந்தால்
மனதார  பெருமைப்பட்டுக்கொள்
     
உப்பு புளி காரம் சேர்த்து
அழகுற சமைத்து
உன்னவர்  ருசித்துண்பதோடு
உனை பாராட்டும்போது
உள்ளுக்குள் தட்டிகொடுத்து
பெருமைபட்டுக்கொள்

பிறப்பை எண்ணி  
வாழ்வை எண்ணி
இயற்கையெண்ணி  
எல்லாத்தையும்விட
எல்லாமுமான நம்மை  படைத்ததை எண்ணி
படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டுக்கொள்

தற் பெருமைகொள்வதிலிருந்து
தவிர்ந்துகொள்

பெருமை படுவதில்
பெருமைபட்டுக்கொள்...

தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

  1. வணக்கம்
    வரிக்கு வரி அழகிய கருத்துக்கள் நிறைந்துள்ளது... கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. 'பிறப்பை எண்ணி
    வாழ்வை எண்ணி
    இயற்கையெண்ணி
    எல்லாத்தையும்விட
    எல்லாமுமான நம்மை படைத்ததை எண்ணி
    படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டுக்கொள்'

    'இறைவனை நேசி இன்பம் பெறுவாய். '

    பதிலளிநீக்கு
  4. அருமை சகோதரி, .வாழ்த்துகள்...........
    உங்கள் எழுத்துக்கள் நீரோடைபோலவே
    வாசிக்க வாசிக்க சில்லுன்னு இருக்கிறது..

    வாழ்க வளமுடன்
    வளமான எழுத்துகளுடன்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது